பெரிய கடவுளைக்காண
திட்டமிட்டு, காத்திருந்து,
செலவு செய்து,
பெரிய வரிசையில் நின்றபின்
கையில் வைத்திருந்த
சின்னக் கடவுள்
நிறுத்தாமல் வீறிட்டது
வெட்கம் பார்க்காமல்
வரிசையில் வந்த வழியிலேயே
வழி கேட்டு
வெளியேறியது ஒரு குடும்பம்
குளத்தருகே காற்றாட
வந்தவுடன்
கோபுரத்தின் சீரியல் லைட்டைப்
பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது
சின்னக் கடவுள்.