மாஞ்சா நூலில்
சிக்கலெடுப்பது
காம்பஸ் வைத்து
தடங்கலில்லாமல்
வட்டம் போடுவது
பட்டறையில்
கண்ணில் விழுந்த அல்லது
கையில் குத்திய
உலோகப் பொடியை
எடுப்பது
காலில் உள்சென்று
உடைந்த முள்ளை
எடுப்பது
குழந்தையின் விரல்களில்
நகம் வெட்டுவது
இவையும்
நுண்கலையென
அறிவோம்