ரிஸஷன் முடிந்து
போனஸ் வந்ததை
மகிழ்ச்சியோடு தெரிவித்தார்
பண்பலை அழைப்பாளர் ஒருவர்
“மறுபடியும் ரிஸஷன்
வந்தா என்ன பண்ணுவீங்க கண்ணன்”
என்ற கேள்விக்கு
கவலையான காலரிடமிருந்து
கனத்த மௌனம் பதிலாக வர
ரிஸஷன் அர்த்தமறியாத
தொகுப்பாளினி அடுத்த
பாட்டை காற்றில்
பரப்பினாள்
கரிகாலென் காலெப்
போல..