Skip to content

Date archive for: June 2010

க‌ண்ட‌க்ட‌ர் ஷ‌ண்முக‌ம்

ப‌ஸ் பாஸ் டிக்க‌டித்து
பெருமையாக‌ டோக்க‌ன்
உப‌யோகித்த‌ கால‌த்தில்
காக்கி சீருடையில்
க‌ண்ட‌க்ட‌ர் ஷ‌ண்முக‌ம்
என‌க்கு அறிமுக‌ம்

வேலைக்கு சேர்ந்த‌ கால‌த்தில்
ப‌ஸ் ந‌ம்ப‌ர் பார்க்காம‌ல்
ப‌க்க‌வாட்டில் இருக்கும்
டெப்போ ந‌ம்ப‌ரின் ப‌ரிச்ச‌ய‌த்தில்
ப‌ஸ் பிடித்த‌ கால‌த்தில்
நீல‌ச்சீருடையில் அதே ஷ‌ண்முக‌ம்

பிள்ளையோடு வால்வோ
ப‌ஸ் பிர‌யாண‌ங்க‌ளில்
பார்க்க‌ நேரிடும்
செக்கிங் இன்ஸ்பெக்ட்ராகி விட்ட‌
ஷ‌ண்முக‌த்தை

வ‌ய‌தாவ‌து ஷ‌ண்முக‌த்துக்கு
ம‌ட்டும‌ல்ல‌..

பேசிய‌ப‌டி

முன் சீட்டில்
உட்கார்ந்த‌வ‌ள்
என்னோடு ஏதும் பேசாத‌
வேளையில்

அவ‌ள் காதில் ஆடிய‌
ஜிமிக்கியுட‌ன் பேசிய‌ப‌டி
போன‌து
என் ப‌ய‌ண‌ம்.

ந‌க‌ர‌ம் மாந‌க‌ர‌ம்

விடுமுறைக்கு ந‌க‌ர‌த்திலிருந்து
வ‌ந்த‌ சிறுவ‌னிட‌ம்
மாந‌க‌ர‌த்தில் வ‌ள‌ர்ந்த‌
சிறுமி கேட்டாள்

உன‌க்கு யுனோ விளையாட‌த் தெரிய‌ல‌
பெள‌லிங் தெரிய‌ல‌
செக்க‌ர்ஸ் தெரிய‌ல‌
ஸ்விம்மிங் தெரிய‌ல‌
என்ன‌ தான் தெரியும் உன‌க்கு
என்று ச‌லித்த‌ப‌டி
கேட்டாள்

ஒரு ப‌க்க‌மாக‌ த‌ரையில்
கை வ‌ச்சு ப‌ல்டிய‌டிப்பேன்
என்று ஹாலில்
3 ப‌ல்டி அடித்துக் காட்டி
சிரித்தான்

இது மாதிரி ப‌ல்டி அடிக்க‌த்
தெரியாத‌
மாந‌க‌ர‌ச்சிறுமி
அழ‌ ஆர‌ம்பித்தாள்

செய்ய‌ முடியாதது

த‌ள‌ர்வாக‌ இருக்க‌முடியாது..

“கொஞ்ச‌ம் லூசா வைங்க‌”
என்று டாக்ட‌ர்
ஊசி போடுவ‌தற்குமுன்
சொல்லும்போது

சிரிக்காம‌ல்,
பேசிக்கொள்ளாம‌ல்,
இருக்க‌ முடியாது..

ப்ரேய‌ர் கூட்ட‌த்தில்
வ‌ரிசையில்
நிற்கும்போது.

%d bloggers like this: