Skip to content

Date archive for: June 2010

நீதி போத‌னை

அரைத்திருட‌ன்‍‍‍ முழுத்திருட‌ன்,
சித்திர‌க் குள்ள‌ர்க‌ள்,
பாலைவ‌ன‌ப் புதைய‌ல்,
ம‌ந்திர‌க் கிளி,
தாசி அப‌ராஜிதா,
ப‌ர‌மார்த்த‌ குரு போன்ற‌
ப‌ல‌ க‌தைக‌ள் சொல்லி
நீதி போத‌னை வ‌குப்புக‌ளில்
பிர‌மிக்க‌ வைத்த‌
இராஜாம‌ணி ஆசிரிய‌ர் வீட்டிற்கு
நாங்க‌ள்
பொங்க‌ல் வாழ்த்து
சொல்ல‌ப் போன‌போது தான்
தெரிந்த‌து

அவ‌ருக்கு
குழ‌ந்தைக‌ள் இல்லையென்ப‌து.

அப‌த்த‌ப் பிர‌யாண‌ம்

இன்னுமா நீங்க‌ நில‌த்தில்
முத‌லீடு செய்ய‌வில்லையென்று
வ‌ருந்தியோடும் விள‌ம்ப‌ர‌
பேன‌ர்க‌ள்

இல்லாளின் ப‌ல்வேறு
நிப‌ந்த‌னைக‌ளை
கேட்ட‌ப‌டி
க‌ண‌வ‌ர்க‌ள்

ப‌ஸ்ஸில் போகோ சேன‌ல் கேட்டு
அழும் குழ‌ந்தை

எப்ப‌டிப் போறான் பாரு..அராத்து
என்ற‌ப‌டி ஓட்டுந‌ருக்கு அருகில்
இட‌ம் கிடைத்த‌ ஒருவ‌ர்

இது ப‌ற்றிய‌
க‌வ‌லையேதுமில்லாம‌ல்
அச்சார‌ம், அத்த‌ பெத்த‌ முத்தார‌ம்
என்று எஸ்.பி.பி.
பாடிக்கொண்டிருந்தார்,
எஃப்.எம்மில்.

என்றாலும்

நின்ற‌து கோவில் வ‌ரிசையில்
என்றாலும்
பார்க்காம‌ல் இருக்க‌
முடிவ‌தில்லை
முன்னே நின்ற‌வ‌ளின்
பின் க‌ழுத்தில்
சுருண்ட‌ முடிக‌ளை

நின்ற‌து ஐசியு வாச‌லில்
என்றாலும்
யோசிக்காம‌ல் இருக்க‌
முடிவ‌தில்லை
அப்பா நார்ம‌லாயிட்டாங்க‌
என்று சொன்ன‌
ஜூனிய‌ர் டாக்ட‌ரின்
தெற்றுப்ப‌ல் சிரிப்பை.

சின்ன‌ ச‌ம்பாத்திய‌த்தில்

சின்ன‌ ச‌ம்பாத்திய‌த்தில்
சீட்டு க‌ட்டி
செய்த‌ ம‌லைப்பான‌
செல‌வுக‌ளே
நினைவில் அதிக‌ம்
நிற்கிற‌து

சிறுவ‌ய‌தில்
நாங்க‌ளே உண்டிய‌ல்
உடைத்து, பொருள் வாங்கி
த‌யார் செய்த‌
தேங்காய் ப‌ர்ஃபி போல‌..

தும்பைப் பூவின்
பின்னாலிருந்து
உறிஞ்சிய‌
நுண்ணிய‌ அள‌வு
தேனைப் போல‌..

%d bloggers like this: