வாழ்ந்து கெட்டு,
வறுமையிலிருக்கும்
ஜமீன் குடும்பத்து
கடைசி வாரிசைப் பார்ப்பது
போல இருந்தது..
ஒரு பக்கம்
ராசி எலக்ட்ரிக்கல்ஸ்
மறு பக்கம்
மணி மெட்டல்ஸ்
விளம்பரம் போட்ட ,
பலகை உடைந்து,
தேங்காய் நார் பிய்ந்த
சீட்டோடு,
ஆளில்லாமல்,
ஒரே ஒரு சைக்கிள்
ரிக்ஷாவை பார்த்தபோது.