யாமறிந்த பயணங்களில்…
குறைந்த காற்றழுத்தத்தால்
ஈரமான நகரத்து
மழை நாட்களில்,
கூட்டம் குறைவான
மின்சார ரயிலில்,
மீசை கலைக்கும்
ஈரப் பெருங்காற்றில்,
கதவோரம் நின்று செய்த
பயணங்கள்
போல இனிதாவது
எங்கும் காணோம்.
டோடோவின் ரஃப் நோட்டு
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்