ஆசையிருக்குது ப்ரிவ்லேஜ் பாங்கிங் பண்ண
அதிர்ஷ்டமிருக்குது பர்சனல் லோன் எடுக்க
ஆசையிருக்குது மலபார் கோல்ட் வாங்க
அதிர்ஷ்டமிருக்குது மணப்புரம் ஃபைனான்ஸ் போக
ஆசையிருக்குது அட்டிகை வாங்க
அதிர்ஷ்டமிருக்குது அடகுக்கடை ரசீதைத் தொலைக்க
ஆசையிருக்குது அடையார்ல ஃப்ளாட் வாங்க
அதிர்ஷ்டமிருக்குது அஞ்செட்டியில மெனை பார்க்க
ஆசையிருக்குது அவங்களைப் போல எழுத
அறிவிருக்குது ரஃப் நோட்டுல கிறுக்க..