தேடிச் சென்று பார்த்த பெண்
என்னைப் பார்க்காது போனாலும்
தேடிச் சென்று சம்பாதித்த பணம்
சேர்த்துவைக்க முடியாமல் போனாலும்
தேடிச் சென்று பார்த்த
பழைய நட்புகள் கண்டுகொள்ளாமல் போனாலும்
தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்
பட்டாம்பூச்சியை
துரத்தும் நாய்க்குட்டி போல்.