Skip to content

Date archive for: December 2010

தானாய்

வானில் போகும் ப்ளேனைப்
பார்த்த‌படியே பாடப்ப‌டும்

த‌மிழ்த்தாய் வாழ்த்து போல‌

வ‌ண்டிக்கார‌ன் தூங்கினாலும்
தானே வீடு சேரும்
வ‌ண்டி மாட்டைப்போல‌

நீ வ‌சிக்கும் தெருவிற்கு
தானாய் தான் போகும்
என் சைக்கிள்.

க‌லைத்த‌தும் தொலைத்த‌தும்

தூங்கிச் சாயும் குழ‌ந்தையைத்
த‌ட்டி எழுப்புவோம்
விழித்தே வ‌ரும் குழ‌ந்தையைத்
அத‌ட்டி தூங்க‌ச் சொல்வோம்
 

பேசாத‌ குழ‌ந்தையை
பேச‌ பிர‌ய‌த்த‌ன‌ப்ப‌டுவோம்
பேசிக்கொண்டேயிருக்கும் குழ‌ந்தையை
பேச்சைக் குறையென்போம்

வ‌ரையும் குழ‌ந்தையை விளையாட‌வும்

விளையாடும் குழ‌ந்தையை ப‌டிக்க‌வும்
ப‌ழ‌குவோம்

இப்ப‌டியெல்லாம் க‌லைத்திருப்போம்

அத‌ன் உருவ‌த்தை..
எப்ப‌டியும் தொலைத்திருக்கும்
குழ‌ந்தை,
அத‌ன் ப‌ருவ‌த்தை.

சின்ன‌ த‌ழும்பு

வெயிலுக்காக‌
அம்மாவின் கால்க‌ளில்
நின்ற‌து

ப‌ள்ளி மைதான‌த்தில்
மேக‌த்தின் நிழ‌லைத்
துர‌த்திய‌து

ம‌ழை நீர் வாய்க்காலில்
சைக்கிள் க‌ழுவிய‌து

முத‌ல்முறை த‌னியே
டிக்க‌ட் வாங்கி
தாய்வீடு ப‌ட‌ம் பார்த்த‌து

காசை தொட்டுப்பார்த்துக்கொண்டே
சேட் க‌டையில் டீ சாப்பிட்ட‌து

நினைவில் சின்ன‌ த‌ழும்பாய்..

ப‌ழ‌த்தில் வ‌த்தி
செருகிய‌ த‌ட‌த்தைப் போல‌.

மாற்ற‌ம்

ப‌ம்புசெட்டு குளிய‌லில்லை
ஏரிக்க‌ரைக்கு ந‌ட‌ப்ப‌துமில்லை
வித வித‌மான‌ ப‌ச்சை நிற‌ங்க‌ள்
ம‌ற‌ந்து


ந‌க‌ர‌ வாழ்க்கைக்கு
கொஞ்ச‌ கொஞ்ச‌மாக‌
மாறக் க‌ற்றுக்கொண்டோம்


ப‌ச்சைப் புல் ம‌ற‌ந்து
பிளாஸ்டிக் காகித‌ம்
மெல்வ‌த‌ற்கு க‌ற்றுக்கொண்ட‌


வ‌ண்டி மாட்டைப் போல‌.

%d bloggers like this: