வைக்கவில்லை
வீடு, மனை எதுவும்
விட்டுப்போகவில்லை
பென்ஷனுமில்லை,
உதவித்தொகையுமில்லை,
குறைந்த பட்சம்,
ஒரு ரெட்டை பட்டை சங்கிலி கூட
இல்லை
சொல்லித்தந்திருக்கிறாள்
மீன் தலையை
எப்படி ஆய
வேண்டுமென.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
வீடு, மனை எதுவும்
விட்டுப்போகவில்லை
பென்ஷனுமில்லை,
உதவித்தொகையுமில்லை,
குறைந்த பட்சம்,
ஒரு ரெட்டை பட்டை சங்கிலி கூட
இல்லை
சொல்லித்தந்திருக்கிறாள்
மீன் தலையை
எப்படி ஆய
வேண்டுமென.
சென்ட்ரலோ எக்மோரோ
சேருவதற்கு
அரை மணி முன்னரே
பல் துலக்கும் படபடப்பு
ஆரம்பமாகிவிடும்
அனைவரிடமும்..
ஒரு வேளை
வரவேற்பவருக்கு (அ)
வீட்டுக்குப் போனவுடன்
முத்தம் தர
வேண்டியிருக்குமோ
என்னவோ.
பூஜ்யம் வந்தடையும் முன்னே
வெடிகுண்டை செயலிழக்கச்
செய்யும்
சாகசக்காரனைப் போல்
சூரிய அஸ்தமனத்திற்கு
முன்னே மந்திரவாதியின்
உயிரை எடுக்கும்
சாகசக்காரனைப் போல்
பேருந்து நகர ஆரம்பித்து
குழந்தைகளும், தாயும்
பதறும் நேரத்தில்
கடைசியில் எறும் ஆணே
குடும்பத்தலைவன்
என அறியப்படுகிறான்.
கான்ஸ்டெபிளாக இருந்து
கணித ஆசிரியரானவர் அவர்
கணிதம் விரைவாக முடித்துவிட்டு
சட்டோபாத்யாய் கமிஷன் பற்றியும்
தொழிற்சாலைகள் பற்றியும்
படிப்பிற்கு வெளியே
படிக்க வேண்டியது பற்றியும்
சொல்லித்தந்தவர்
பின்னொரு நாளில்
ஏதோ காரணத்துக்காக
தன் மூச்சை
தானே நிறுத்திக்கொண்டார்
எனக் கேட்ட பிறகு
அவர் வசித்த
தெருவைத் தவிர்த்து
சுற்றிக் கொண்டு
போகப் பழகினேன்..
வெள்ளை மருந்துப்பொடி
தூவிய கோட்டை
தவிர்த்துப் போகும்
எறும்பு போல.