குழந்தைகளுக்கு பிஸ்கட்
வாங்கிச் செல்வேன்,
அரசியல் பேசுவேன்,
சொல்லும் கஷ்டங்கள்
கேட்டுக்கொள்வேன்,
என் கஷ்டம்
தடுமாறிச் சொல்வேன்,
எல்லாம் செய்வேன்..
தந்த கடனைத்
திருப்பிக் கேட்க முடியாமல்
திரும்பி விடுவேன்.
கொடுத்த கடனைக்
கேட்டு வாங்கத்
துப்பில்லாதவன்
என்ற பட்டத்தை வாங்க..