Skip to content

Date archive for: March 2011

அறிந்த‌ வ‌ய‌தில்

அறியாத‌ வ‌ய‌தில்..

வெல்ல‌ம் வைத்து
ஈக்க‌ளைச் சேர்த்து
அடித்திருக்கிறேன்

கை ப‌ம்ப்பில்
ம‌ண்ண‌ள்ளி
போட்டிருக்கிறேன்

வ‌டை வைத்துப்
பிடித்த‌ எலியை
கோணியில் க‌ட்டி
அடித்திருக்கிறேன்

எறும்பின் பாதையில்
த‌ண்ணீர் ஊற்றியிருக்கிறேன்

அறிந்த‌ வ‌ய‌தில்..

சொல்லிய‌தேயில்லை
‘நான் யாருக்கும் எந்த‌
கெடுதியும் செஞ்ச‌தில்லையே’
என்று.

அம்மாவின் க‌டித‌ம்

அன்ன‌க்கூடை துணியை
அல்லிகுள‌த்தில்
துவைத்து,
ந‌ல்லான் கிண‌ற்றில்
த‌ண்ணீர் சேந்தி
சேர்த்த‌ சேத்துப்புண்க‌ள்

செருப்பில்லாத‌
காலில் ரேகைபோல‌
பித்த‌ வெடிப்புக‌ள்

பாத்திர‌ம் தேய்த்தே
தேய்ந்த‌ ந‌க‌ங்க‌ள்

இதெல்லாம் ஞாப‌க‌ம்
வ‌ரும்

“நான் இங்கு ந‌ல‌ம்”

என்ற‌ வ‌ரியை
ப‌டிக்கும் போது

க‌ண்ணிலான்

ந‌டு இர‌வில்
மின்சார‌ம் போய்
த‌ண்ணீர் குடித்து
விசிறி தேடி
கொசுவின் கீர்த்த‌னை
கேட்கும்போது
ஒரு நொடி
மின்சார‌ம் வ‌ந்து போகும்

க‌ண்ணிலான்
க‌ண் பெற்றிழ‌ந்தான்
என்னும் காவிய‌
வ‌ரியும்
கூட‌வே வ‌ந்து போகும்.

அதிக‌ மாற்ற‌மில்லை

அதிக மாற்ற‌ம்
இல்லை

9 ம‌ணிக்கு
ஊராட்சி ஒன்றிய‌ ச‌ங்கு
ஊதிக்கொண்டிருக்கும்

பைப்பை
ப‌ழுப்பு என்று
சொல்லிக்கொண்டிருக்கும்

த‌ர்மாஸ்ப‌த்திரி
குளுக்கோஸை
உயிர் காக்க‌
ந‌ம்பிக்கொண்டிருக்கும்

க‌மிட்டி நெல்விலையை
ஷேர் மார்க்கெட்
போல‌
க‌வ‌னித்துக்கொண்டிருக்கும்

ல‌ட்சுமிப‌தி ப‌ஸ் க‌ட‌ந்தால்
 ம‌ணி 12 என‌
எண்ணிக்கொண்டிருக்கும்

கால‌ர் உள்ளே

க‌ர்சீஃப் சொருகி
சைக்கிளில்
சுத்திக்கொண்டிருக்கும்

என் சொந்த‌ ஊரில்.

%d bloggers like this: