Skip to content

Date archive for: July 2011

த‌ட‌ம்

சில‌ குழ‌ந்தைக‌ள்
சில‌ சிரிப்புக‌ள்

சில‌ முக‌ங்க‌ள்

சில‌ ச‌ண்டைக‌ள்
சில‌ வ‌ரிக‌ள்

சில‌ அவ‌மான‌ங்க‌ள்
சில‌ உத‌விக‌ள்
ப‌திந்தே கிட‌க்கின்ற‌ன‌

பூசி மெழுகிய‌ ஈர‌ சிமெண்டில்
நாய் ஓடி ஏற்ப‌டுத்திய‌
கால‌டித் த‌ட‌த்தைப் போல‌.

எர‌வாண‌த்தில் சொருகி
வைத்த‌ ப‌ழைய‌
லாட்ட‌ரி சீட்டுக‌ளைப் போல‌.

அ.ஆ.மே.ப‌ள்ளி

ப‌ச்சை க‌ல‌ர்ல சைக்கிள் கொடுத்தாங்க‌
பெருசு பெருசா சாத‌ம் போட்டாங்க‌
அள‌வு சிறுசா முட்டையும்,

அள‌வு பெருசா ச‌ட்டையும் கொடுத்தாங்க‌..

இன்னும் புஸ்த‌க‌ம்
கொடுத்த‌ பாடில்லை..

அப்படியே கொடுத்தாலும்
ப‌டி ப‌டின்னு சொல்வாங்க‌..

எப்படி ப‌டிக்க‌ணுங்க‌ற‌தை
ம‌ட்டும்
சொல்லித் த‌ர‌வே மாட்டாங்க‌,

க‌டே‌சி வ‌ரைக்கும்.

ப‌ற‌வையின் கூற்று


குள‌த்து நீர் வ‌ற்றிய‌து – அல‌கின்
கூர் தீட்டிய‌ கிளையும் முற்றிய‌து,

என் க‌ன‌வெல்லாம்
இரையாக‌ப் போகும்
மீனைப் ப‌ற்றிய‌து.

கோபுர‌க் குயில்

[ ந‌ண்ப‌ர் கிருஷ்ணா அனுப்பும் ஃபோட்டோ பார்த்தேன்.. க‌விதையை வார்த்தேன் [ ப‌டிச்சிட்டு வேர்த்தேன்னு க‌மெண்ட் அடிக்காதீங்க‌.. :)  ]
ஓர் இன‌ம்தான்
நீயும் நானும்


ப‌ச்சையால் நீ
ப‌ராச‌க்தியின் தோள்
மேலேயும்

காரால் நான்
வெட்ட‌ வெளியில்
ந‌ட்ட‌ கோபுர‌த்தின் மேலும்..


===
பெயிண்ட‌ர் பெருமாள்

 
ப‌ல‌ வ‌ண்ண‌ம்
ப‌ல‌ பிர‌ஷ்க‌ள்
ப‌ல‌ நாட்க‌ள்
செய்த‌ வேலையால்
வ‌ண்ண‌ம‌ய‌மாக‌ நீயும்
காண்ட்ராக்ட‌ர் காசு
த‌ராததால்
ம‌ங்கிய‌ நிலையில்
நானும்

வான‌த்தை நோக்கிய‌ப‌டி


===

வ‌லிமையான‌ தோள்க‌ளால்
ப‌ர‌ந்த‌ முதுகால்
யாளியின் ப‌ராக்கிர‌ம‌த்தால்
ரிஷ‌ப‌த்தின் திமிலால்
கோபுர‌ம் நிற்ப‌தாக‌
பெருமைப்ப‌ட்ட‌ன‌
பொம்மைக‌ள்

இடிதாங்கி
சிரித்துக்கொண்ட‌து.

%d bloggers like this: