asdfg ;lkjh அடிக்க வருபவளுக்காக,
தடுப்பூசி போடுவதற்காக,
முடி வெட்டிக்கொள்ள
சிக்னலில் பச்சை விழ,
நடு இரவில் போன
அரசு அலுவலரின்
பெரிய டாக்டர் ரவுண்ட்ஸ் வர,
முடியப்போகும் உரையாடலுக்காக,
இப்படியெல்லாம் காத்திருந்து
தற்போது
வேறு மாதிரியாகக்
காத்திருக்கிறேன்
நிகழ்வுகளை சுமந்துகொண்டு
பொருத்தமான
உவமைக்கும்
வார்த்தைகளுக்கும்.