குழந்தை
விழும் அடுக்கு மல்லி
உருவாக்கிய
லேசான அலையைப் போல்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
பூண் போட்ட பிரம்பால்
டஸ்டரால்
சாக்பீஸால்
பைண்டிங் செய்த புத்தகத்தால்
சரமாரியாக பள்ளிக்கூடத்தில்
அடி வாங்கியபோது
கலங்கியதில்லை
கலங்கினேன்
கான்வென்டில் டீச்சர்
கையில் அடித்த
கண்ணாடி ஸ்கேல்
இரண்டாக உடைந்ததை
சிரித்துக்கொண்டே
மகன் சொன்ன போது
வாத்தியார்களிடம்
அடி வாங்குவதை நினைத்து.
முடிந்து விடுகிறது
நமது இக்கால
நேரடி
உரையாடல்கள்
நினைக்காமல்
இருக்க முடிவதில்லை
தீப்பந்தம் போல
விடிய விடிய
எரிந்த
நமது அக்கால
தொலைபேசி
உரையாடல்கள்
முறை கொண்டாடி
மணமுடிக்க
முடியாமல் போனவர்களும்,
சற்று அதிகமாகவே கொஞ்சப்படும்
அவர்களின் குழந்தைகளும்
இது தெரியாமல்
சிரித்து வைக்கும்
தற்போதைய துணைகளும்,
ஏதாவது ஜாதகம் கிடைக்க
ஏங்கும் அப்பாக்களும்
இதன் எந்த விபரீதமும்
புரியாமல் சிரித்த படியிருக்கும்
மணமக்களும்
இணையும் ஒரு
விசேஷம்.