Skip to content

Date archive for: September 2011

அட‌ர்த்தி

உற‌ங்கும் ம‌லை,
ந‌ட‌மாட்ட‌மில்லாது
ஓய்ந்த‌ சாலை,
பின்னிர‌வில் எரியும்
தெருவிள‌க்கு,
மூடிய‌ கோவில் க‌த‌வு,
க‌விழ்ந்து தூங்கும்
குழ‌ந்தை

இவைகளை விட‌
அட‌ர்த்தியாக‌

த‌‌‌ண்ட‌வாள‌ங்க‌ளாக‌
ப‌டுத்திருக்கும்,

ந‌ம்மிருவ‌ர் ந‌டுவே
மௌன‌மும்

ப‌க்க‌வாட்டில் வ‌ழியும்
உன் க‌ண்ணீரும்.

இணைப்பு

குகையில் போய்
முடியும்போது
சேர்ந்துவிடுவோம்
என்ற‌
ந‌ம்பிக்கை‌யுட‌ன்

ஒரே திசையை நோக்கி
இர‌ண்டு
த‌ண்ட‌வாள‌ங்க‌ள்

எது ந‌க‌ர்வ‌து

நக‌ர்வ‌து ந‌ம் ர‌யிலா
ப‌க்க‌த்து
ர‌யிலாவென‌த்
தெரியாத‌து போல‌வே
இருந்த‌து

யார் கொடுத்த‌து
முத‌ல் முத்த‌மென

யார் க‌ண்ணில்
வ‌ந்த‌து
முத‌ல் துளியென‌வும்

%d bloggers like this: