நகராத சக்கரம்.
எப்போதோ
உற்சவர் சுமந்து
ஊர் சுற்றி வந்த பெருமை.
பிரதேசத்தின் அடையாளமாய்
இருப்பின் பெருமிதம்.
வேரில்லாத, கிளையில்லாத
மக்கிய மரமாக
வராத திருவிழாவை
எதிர்நோக்கி
வீதியின் முடிவில் தேரும்,
விதியின் முடிவில்
வீட்டுத் திண்ணையில்
தாசில்தார் தாத்தாவும்