இரு கையில்
அள்ளிய நீரில்
தெள்ளிய நிலவு,
அள்ளிய நீரில்
தெள்ளிய நிலவு,
அலைந்தபடி..
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
அலைந்தபடி..
மாநகரப் பேருந்தில்
குடும்பத்துடன் போவது போல்,
அறுந்த செருப்புடன்
நடப்பது போல்
சிரமப்படுகிறேன்
காதல் கவிதை எழுத.
சிரித்தபடியே இருக்கும்
மணமகனைக் காட்டியது
மணமக்கள் நின்ற இடத்திலேயே
தாஜ்மகால், கன்னியாகுமரி,
தஞ்சாவூர் என
கிராஃபிக்ஸில் காட்டியது
தாலி கட்டுவதையும்
முடிச்சின் மேல்
குங்குமம் வைப்பது வரை
துல்லியமாகக் காட்டியது
பிறகு நன்றியும்
தெரிவித்தது
சில அட்சதை
அரிசிகளோடு
நின்றிருந்த
எல்.சி.டி. டீவி.