“அப்றம்.. வேறென்னங்க ?”
எனக் கேட்டு
முடிக்கத் தெரியாத
என் உரையாடல்கள்
“வாழ்க்கைங்கறது..”
என அடுத்தவர்
கஷ்டத்திற்கு நான்
சொல்லும் ஆறுதல்கள்
“எனகென்னன்னா..”
எனத் தொடங்கும்
என் கொள்கை
விளக்கங்கள்
எதனோடும் ஒட்டாமல்
அபத்தமாகவே தெரியும்
நண்பகலிலும் ஒளிரும்
சோடியம் விளக்கு
போலவே !
எனக் கேட்டு
முடிக்கத் தெரியாத
என் உரையாடல்கள்
“வாழ்க்கைங்கறது..”
என அடுத்தவர்
கஷ்டத்திற்கு நான்
சொல்லும் ஆறுதல்கள்
“எனகென்னன்னா..”
எனத் தொடங்கும்
என் கொள்கை
விளக்கங்கள்
எதனோடும் ஒட்டாமல்
அபத்தமாகவே தெரியும்
நண்பகலிலும் ஒளிரும்
சோடியம் விளக்கு
போலவே !