சின்ன சட்டையால்,
புரளும் பட்டுப்பாவடையில்,
நடந்து பழகும்
குழந்தையின்
பாதி வயிறு தெரிந்தது,
பிறை நிலவாய்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
நடந்து பழகும்
குழந்தையின்
பாதி வயிறு தெரிந்தது,
பிறை நிலவாய்.
“வாப்பாவுக்கு நெஞ்சு வலி,
பெரியாஸ்பித்திரில இருக்காப்ள,
இப்பம் நாந்தான்
கடை போடறண்ணே”
சின்ன மகன் சொன்னான்
அதே சிரிப்போடு.
மாதக்கணக்கில் மடித்து
பழுப்பேறிய பட்டு வேஷ்டி,
ரசகற்பூர வாசனையோடிருக்கும்
கட்டம் போட்ட சட்டை,
ஓடாத ரேடோ கைக்கடிகாரம்,
பவழம் தேய்ந்து நூல் சுற்றிய
மோதிரமும்,
எம்சிஆர் செருப்புடன்
கடைசி வரிசையில்
தனியாக உட்கார்ந்திருந்த
அப்பா
சங்கு சத்தம் பிடிக்காமல்,
ஓல்டேய்ன், ரைய்ய் சத்தமில்லாமல்,
மல்லி, அரிசி முறுக்கு விற்காமல்,
கோரைப்பாய் கட்டு ஏற்றாமல்,
எல்லா பஸ்ஸும் புறக்கணித்தே
செல்லும்
பழைய பஸ் ஸ்டாண்ட்
போலவே தெரிந்தார் !