நெற்றியில், மூக்கில்,
காதில்
பட்டிருக்கலாம்
லேசாகவோ,
அடர்த்தியாகவோ
விழுந்திருக்கலாம்
கறையோடு
படலாம்
இடையில் ஆடை
தடுத்திருக்கலாம்
எப்படி பட்டிருந்தாலும்
ஒன்று தான்
என் மேல் பட்ட
எதிர்பாராத
மழையும்,
உன்
முத்தமும்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
நெற்றியில், மூக்கில்,
காதில்
பட்டிருக்கலாம்
லேசாகவோ,
அடர்த்தியாகவோ
விழுந்திருக்கலாம்
கறையோடு
படலாம்
இடையில் ஆடை
தடுத்திருக்கலாம்
எப்படி பட்டிருந்தாலும்
ஒன்று தான்
என் மேல் பட்ட
எதிர்பாராத
மழையும்,
உன்
முத்தமும்.
புத்தர் சிலை முன்
விளக்கேற்றினேன்
எரியும் சுடர்
வெளிப்படுத்தியது
ஒரு பெரிய
வெளிச்ச புத்தரையும்,
அதை விடப் பெரிய
இன்னொரு
நிழல் புத்தரையும்
பெரிய மால் ஒன்றில்,
விடீயோ கேம்ஸ்
பிரிவின் செக்யுரிட்டி ,
நேபாளத்திலிருந்து
வந்தவன்
பகலெல்லாம்
கார்டு தேய்த்து,
பணம் கொட்டி,
ஆடும் குடும்பங்கள்,
அவனைக் குழப்பும்
பின்னிரவில் எல்லாம்
மூடிய பின்
பெரிய சுத்தியல் வைத்த
பலம் சோதிக்கும் மெஷினில்
வெறும் சுத்தியலால்
அடித்து கோபம் தணிப்பான்
ஊரில் விட்டு வந்த
குழந்தைகளையும்,
தன் இயலாமையையும்
நினைத்து
பாயிண்டுகள் எதுவும்
எடுக்காமலே
சூரியன் சரியும் நேரம்.
நெடுஞ்சாலையில் காரில்
வேகமாக கடந்தபோது,
2 பெரிய சிறுமி, ஒரு பெண்
ஓரமாக நிற்க
பைக்கை உதைத்த படி
ஒரு கணவன்
“நம்ம நிறுத்தி கேட்டிருக்கலாம்”
– மனைவி
“நாட்டு நடப்பு தெரியாது.. உனக்கு
” – சமாதானம் சொல்லி,
நிறுத்தாமல் போனேன்
சிறியதாகிக் கொண்டே
போனது..
பக்கவாட்டு கண்ணாடியில்
தெரிந்த,
பைக்கை இன்னமும்
உதைத்தபடியே இருந்த
அந்தக் குடும்பம் மட்டுமல்ல