யாரும் யாரையும்
கவனிக்கவே முடியாத
நெரிசலான
ஒரு மாநகர பஸ் பயணத்தில்
“ப்ளூஸ்டார் ஒண்ணு..
பாஸ் பண்ணுங்களேன்”
என்று 100 ரூபாய்
கொடுத்தார் ஒருவர்..
ஒரு கையில்
கட்டைப பையும்
கம்பியும் பிடித்து
தடுமாறாமல் அந்த நோட்டை
வாங்கி பாஸ்
பண்ணுவதற்குள்
“அப்படியா.. எப்போ ?”
என்று யாரோடோ
போனில் பேசி
அவசரமாக
சிக்னலில் இறங்கிவிட்டார்
அவர்..
என் நேர்மையைப்
பார்த்து பல்லிளித்தபடியே
இருந்தது
பாஸ் செய்யப்படாத
அந்த 100 ரூபாய் !