Skip to content

Date archive for: June 2015

ரகசியமாய்

இனிஷியல் போட்ட
பிளாஸ்டிக் குடங்களும்
வெறும் வெப்பத்தை
மேலேற்றிய மோட்டாரும்
வெயில் தின்ற
டிஷ் டீவி கிண்ணமும்
அனல் கடத்தும்
துணிக்கம்பிகளும்

ரகசியமாய்
சிரித்துக்கொண்டன

வெயில் முடிந்த
முதல் மழைக்காக.

ஒரு திங்கள்கிழமை காலையில்

வானம் பார்க்க மாட்டார்கள்
கடலும் பார்க்க மாட்டார்கள்
பாட்டு கேட்க மாட்டார்கள்
பூவும் பார்க்க மாட்டார்கள்
சிரிக்க மறந்திருப்பார்கள்
சோற்றுப் பருக்கையை
சேர்க்கும் சிந்தனையோடு

நகரமெங்கும் தெறித்து
சிதறி ஓடுவார்கள்
பெரும் பரபரப்போடு

பிள்ளையார் எறும்புகள்
போலவே !

மணி

யாருக்கும்
நேரமிருப்பதில்லை
மாதா கோயில் மணியை
எண்ணி

நேரத்தைத்
தெரிந்துகொள்வதற்கு !

%d bloggers like this: