பைபாஸ் சாலை மீடியனில்
சாக்கடை நீரூற்றி
வளர்த்த செவ்வரளியும்
கோவில் வாசலுக்கு போக
கலங்கிய குட்டையில்
சேறும், பாசியும் சூழ்ந்த
தாமரைப்பூவும்
அம்மன் சன்னதிக்கு போக
ஏரிக்கரை வேலியோரம்
பூத்த எருக்கம்பூவும்
மண் பிள்ளையாருக்கு
மாலையாக
எந்தக் கடவுளிடமும்
போகாமல் இரும்பு கேட்டின்
மேல் வளைவில் காற்றோடு
நாத்திகம் பேசிக் கிடந்தது
காகிதப் பூக்கள்.