மெஷினோ, மேற்படிப்போ,அதிகாரியோ,
அறுவை சிகிச்சை செய்பவரோ
நகர நெருக்கடியிலிருந்து
தப்பித்து பயணிக்கும்
ஒருவனும்
வெள்ளரியோ, வேர்க்கடலையோ,
சாயநூலில் கட்டிய மல்லியோ,
நாகப்பழமோ, எதையோ
வியாபாரம் செய்து
நகரத்துக்கு போய்விடுவதில்
தீர்க்காமாய் இருக்கும்
ஒருவனும்
ரெயில்வே கேட்டருகே
காத்திருக்கும்போது
பரஸ்பரம் கடந்து கொண்டனர்..
எதிரே, வரி வரியான மஞ்சள்
உடம்புடன் கீழே
விழும் பூவரசம்பூக்கள்
பார்த்தபடி எங்கும்
நகரப் பிடிக்காமல்
ஒரு சிறு கோவில்
தெய்வம்.