4 நாட்கள் தொடர் மழையால்
பெரும் காடு அழிக்கும்
வேலையை தற்காலிகமாக
நிறுத்தி வைத்திருந்த
பெரிய இயந்திரத்தின்
சக்கரத்தடியில்
புதிதாய்
முளைத்திருந்தது
ஒற்றை இலையுடன்
இன்னுமொரு
கானகம்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்