உமி கொட்டிய சிறு அடுப்பு
வயதாகி மழுங்கிய மரப்பெட்டி
பொன்னிற பிரஷ்
சிறு வயர் கூடையில்
சில்வர் டப்பா உணவு
மூக்கில் இறங்கும் கண்ணாடி
இவை கொண்டு
மஞ்சள் நிறத் தீயக்
குவித்து நீலமாக்குவான்
குவிந்த வெள்ளை நுரையில்
உலோகத்தின் அழுக்குப்
போக்குவான்
குழந்தை போல கொலுசுகள்
கிடத்தி மணி ஒட்டுவான்
சிறு நாணல் குழைக்குள்
செப்பு குழை இறக்குவான்
கடையில் எட்டிப் பார்த்து
நேரமோ, அன்றைய விலையோ
சொல்லும் அவன்
வாசலிலும்
அவர் தம் செய்த நகைகள்
ஏசி கடைக்குள்ளும்.