Skip to content

Date archive for: June 2016

கறை

வெளிநாட்டில் இருந்து
வாப்பாவிடமிருந்து
வந்த பெரிய கடிதத்தில்
நிறைய வார்த்தைகள்,
விசாரிப்புகள்..
அவையாவையும் விட
அதுகம் அர்த்தம்
கொண்டிருந்தது
கையெழுத்து போட்ட
இடத்தில் மை அழித்திருந்த
நீர்க்கறை

தொலைவில்

பின்னிரவில்,
சைக்கிளில் போனபடி
கைத்தடியைத் தட்டி
விசில் ஊதும்
கடமையிருந்தும்
குழந்தை தூங்கும் வீடு
தாண்டும் தருணம்
கவனமாகத் தவிர்ப்பார்,
எங்கோ தொலைவில்
கைக்குழந்தையை விட்டுவிட்டு
இங்கு வேலை பார்க்கும்
கூர்க்கா !

வாஸ்து

ஒரு கையில் சாய்ந்து
சாவகாசமாய்
படுத்து சிரித்திருக்கும்
வாஸ்து புத்தருக்கு
அமையவில்லை
வீடும்
வாசலும்.
%d bloggers like this: