பின்னோக்கிப்
பறக்கும் உன் முடி
நீராவிப் புகை பறக்கும் ரயில்
உன் காதின் சுழிப்பு
மலை ரயில்வழி வளைவு
சாலை கடக்கும் நீ
பாலம் கடக்கும் ரயில்
கண் மூடும் நீ
குகையைக் கடக்கும் ரயில்
நிறுத்தாத உன் பேச்சு
ரயில் மேல் பெருமழை
கடைசியாய்க்
கையசைத்துப் போன நீ
ரயில் கடந்த சிற்றூர்
நடைமேடையென நான்,
வெறுமையையாய்