Skip to content

Date archive for: September 2016

கரை

நதிக்கரை நகர்கிறது
என கடல் கலந்தழியும்
நதி நினைத்திருக்க
நதி  நகர்கிறது
என நகர்ப்புறமாகப் போகும்
நதிக்கரை நினைத்திருக்க
நதி நீரில் மேகங்களின்
பிம்பமாக நகர்கிறது
காலம்.

 

நினைவில் காடுள்ள விதை

அடர்ந்த காட்டின் மத்தியில்
ஒரு மலையுச்சியில்
எப்போதோ பெய்யப் போகும்
பெருமழைக்காலக் காத்திருப்பில்
உயர்ந்த கோட்டை
மதில்சுவர் இடுக்கில்
ஒடுங்கியது
ஒற்றைக்காட்டின்
விதை ஒன்று
எதிரே தன்
பச்சைப் பரம்பரையைப்
பார்த்தபடி
%d bloggers like this: