Skip to content

Random கவிதை!

உரையாட‌ல்

ப‌ங்கு வ‌ர்த்த‌க‌ம்,வைப்பு நிதி,ம‌ண் முத‌லீடுஇப்ப‌டியிருக்கும்ந‌ண்ப‌ர்க‌ளுக்கான‌ உரையாட‌லில்..எஸ்.பால‌ச்ச‌ந்த‌ர் ப‌ட‌ங்க‌ளையும்,திரையிசை ப‌ற்றியும்,ச‌ம்ம‌ந்த‌மில்லாம‌ல்இருக்கும் என் பேச்சுமுனியாண்டி விலாஸ்க‌ல்லாவில்இருக்கும்விபூதிக்கிண்ணம் போல்.

[ read more ]

பட்டாம்பூச்சி

பாதையற்ற தொலைதூரப் பயணக் கப்பலில துளையிட்ட அட்டைப்பெட்டியில் இருந்து விடுபட்டு, விடுதலை என்றெண்ணி வெகுதொலைவு மிதந்து திசையில்லாத, பூக்களில்லாத, மரங்களில்லாத பெருங்கடல் மேலொரு கப்பல் தொலைத்த பட்டாம்பூச்சி.

[ read more ]

நிழல் வெளிச்சம்

புத்தர் சிலை முன் விளக்கேற்றினேன் எரியும் சுடர் வெளிப்படுத்தியது ஒரு பெரிய வெளிச்ச புத்தரையும், அதை விடப் பெரிய இன்னொரு நிழல் புத்தரையும்

[ read more ]

மை

உன் விரல் என் விரல் முதல் வருடல் உன் மை என் இதழ் 'வாய்'மை உன் இதழ் என் இதழ் வட்ட முத்தம் நம் மெய் நம் உயிர் பூத்தது புது உயிர்மை.

[ read more ]

நீதி போத‌னை

அரைத்திருட‌ன்‍‍‍ முழுத்திருட‌ன்,சித்திர‌க் குள்ள‌ர்க‌ள்,பாலைவ‌ன‌ப் புதைய‌ல்,ம‌ந்திர‌க் கிளி,தாசி அப‌ராஜிதா,ப‌ர‌மார்த்த‌ குரு போன்ற‌ப‌ல‌ க‌தைக‌ள் சொல்லி நீதி போத‌னை வ‌குப்புக‌ளில் பிர‌மிக்க‌ வைத்த‌இராஜாம‌ணி ஆசிரிய‌ர் வீட்டிற்கு நாங்க‌ள்பொங்க‌ல் வாழ்த்து சொல்ல‌ப் போன‌போது தான்தெரிந்த‌துஅவ‌ருக்கு குழ‌ந்தைக‌ள் இல்லையென்ப‌து.

[ read more ]

சின்ன‌ ச‌ம்பாத்திய‌த்தில்

சின்ன‌ ச‌ம்பாத்திய‌த்தில்சீட்டு க‌ட்டிசெய்த‌ ம‌லைப்பான‌செல‌வுக‌ளே நினைவில் அதிக‌ம்நிற்கிற‌துசிறுவ‌ய‌தில்நாங்க‌ளே உண்டிய‌ல் உடைத்து, பொருள் வாங்கித‌யார் செய்த‌தேங்காய் ப‌ர்ஃபி போல‌..தும்பைப் பூவின்பின்னாலிருந்துஉறிஞ்சிய‌நுண்ணிய‌ அள‌வுதேனைப் போல‌..

[ read more ]

டூர் போன ஃபோட்டோ

எப்போதோ குற்றாலம் டூர் போன ஃபோட்டோ கிடைத்தது ஃபோனிலும் நேரிலும் இன்னும் தொடர்பில், வேர் பிடித்து ஆழமாய்.. சிலர். காணாமல் போயிருந்தனர், காற்றில் மறைந்த கேஸ் பலூன்களாய்.. பலர். யாரோடும் கலக்காமல், நெடுஞ்சாலையில் தனியே கிடக்கும் தொப்பியாய் நான் !

[ read more ]

இதயம்

என் வீட்டு வேப்பமரம் மதில் மீறி, உன் வீட்டுக் கோலம் எட்டிப் பார்த்துச் சாய்ந்திருக்கும் அது கொட்டும் இலைகள் தவிர்த்து உதிரும் பூக்கள் தவிர்த்து தாழும் கிளை தவிர்த்து உன் வீட்டுப் பக்கம் பரவும் வேரில் உதிரம் அதிரும் என் காதல் கவிதை அனுப்புவதற்குள் வந்து சேர்ந்துவிட்டது வாட்ஸ்ஆப்பில் உன் கல்யாணப் பத்திரிகை !

[ read more ]

மாற்ற‌ம்

ப‌ம்புசெட்டு குளிய‌லில்லைஏரிக்க‌ரைக்கு ந‌ட‌ப்ப‌துமில்லைவித வித‌மான‌ ப‌ச்சை நிற‌ங்க‌ள்ம‌ற‌ந்துந‌க‌ர‌ வாழ்க்கைக்குகொஞ்ச‌ கொஞ்ச‌மாக‌மாறக் க‌ற்றுக்கொண்டோம்ப‌ச்சைப் புல் ம‌ற‌ந்துபிளாஸ்டிக் காகித‌ம்மெல்வ‌த‌ற்கு க‌ற்றுக்கொண்ட‌வ‌ண்டி மாட்டைப் போல‌.

[ read more ]

க‌டைசி வாரிசு

வாழ்ந்து கெட்டு, வ‌றுமையிலிருக்கும் ஜ‌மீன் குடும்ப‌த்துக‌டைசி வாரிசைப் பார்ப்ப‌து போல‌ இருந்தது..ஒரு ப‌க்க‌ம் ராசி எல‌க்ட்ரிக்க‌ல்ஸ்மறு ப‌க்க‌ம்ம‌ணி மெட்ட‌ல்ஸ்விள‌ம்ப‌ர‌ம் போட்ட‌ ,ப‌ல‌கை உடைந்து, தேங்காய் நார் பிய்ந்த‌சீட்டோடு,ஆளில்லாம‌ல்,ஒரே ஒரு சைக்கிள்ரிக்ஷாவை பார்த்த‌போது.

[ read more ]

மணல் பறவை

எப்போதோ நுரை பொங்கி சுழித்து கரை தளும்பி, பள்ளி முடிந்த குழந்தையின் வேகத்தில் நகரும் நீரெங்கும் நீல ஆகாயம் பிரதிபலித்திருக்க தன் பிம்பம் தண்ணீரில் பார்த்ததை லேசான குளிரோடு நினைத்ததுகொண்டது நீர்ப்பறவை.. வேறொரு நாளில் அனல் பறக்கும் மணல் திட்டில் அலைஅலையாக சுட்டபடி நகரும் தன் நிழல் பார்த்து பெருமூச்சோடு போனது மணல் பறவையாக.

[ read more ]

(க்)ஆட்சி மாற்ற‌ம்

ஓட்டு எண்ணிக்கையில்ஆட்சி மாற்ற‌ம் ப‌ற்றியசெய்திக‌ளின்போதுபெரிய‌வ‌ர்க‌ளும்காட்சி மாற்ற‌ம் செய்துந‌டுநடுவே போட‌ப்ப‌டும்ஜெய்ச‌ங்க‌ர் ப‌ட‌த்தின்போதுசிறுவ‌ர்க‌ளும்ஆர்வ‌ங்க‌ளைஇட‌ம் மாற்றிக்கொண்டோம்.

[ read more ]

அஞ்சு விளக்கு

ஆலமரம், ஆட்டோ ஸ்டாண்டு இளநீர் கடை என வித விதமாக அடையாளம் காணப்பட்ட முச்சந்தியின் பெயர் ஒரே நாளில் மறைந்துவிட்டது வெள்ளை வெளிச்சம் பரப்பும் அலுமினியப் பனைமரம் போல் உயரமான அஞ்சு விளக்கு வைக்கப்பட்டப் பின்னர் சந்தோஷமான விளக்கு இரவில் கொடுத்தது ஆளுக்கு அஞ்சு நிழல்கள்

[ read more ]

வெற்றிவேல்

தோள் துடித்து கரம் இறுகி வேல் பற்றி களம் ஓடி அம்பு சொருகி முதலில் செத்த படைவீரனுக்கு தெரிவதேயில்லை போர் தொடுத்த காரணம்

[ read more ]

உற‌க்க‌ம்

உற‌க்க‌ம் பிடிப்ப‌தில்லைஎன்று யாராவ‌துசொல்ல‌க் கேட்கும்போதெல்லாம்ம‌ன‌தில் வ‌‌ந்து போகும்அதிகாலை வேளையில்செங்க‌ல் லோடு லாரியில்வேட்டி போர்த்தி ஆழ்ந்து உற‌ங்கிய‌ வேலை‌யாளின்உற‌க்க‌ம்

[ read more ]

குடை

பொதுவான நிறம் தனக்கில்லை சுடும் வெயில் கண் கூசியதில்லை பெருமழையில் நனைந்ததில்லை பலத்த காற்றில் திருப்பிக் கொண்டதில்லை குழந்தைகள் தொட்டு விளையாடியதில்லை என பல கவலைகள் பெரிய லைட்டோடு ஒட்டி மணமேடையில் சுவாரசியமில்லாமல் நின்றபடி இருக்கும் வெள்ளைக் குடைகளுக்கு !

[ read more ]

சடை

அதிகாலை பெய்த மழை முடிந்து முதல் வெய்யிலின் மினுமினுப்பில் நீர் சொட்டியபடி புன்னகைத்தது மஞ்சள் சரக்கொன்றை.. முன் பக்கம் போடப்பட்ட அவளின் ஒற்றைச் சடையைப்போல்

[ read more ]

பாக்கி இருக்க‌ற‌து

ப‌க்திப்பெருக்கும், ஆல‌ய‌த்திருப்ப‌ணிக‌ளும் அதிக‌மாகிவிட்டஇந்நாட்க‌ளில், ஓர் இர‌வில் ..க‌ல் மண்ட‌ப‌த்தூண்க‌ளும்,அர‌ச‌ ம‌ர‌மும்மூல‌வ‌ருட‌ன்பேசிகொண்டிருந்தன‌.." கோயில் முழுதும்ச‌ல‌வைக்க‌ல்லும்,கிரானைட்டுமாக‌ ஆகிடுச்சுங்க‌..த‌கிடு அடிக்காம‌,டைல்ஸ் ஒட்டாம‌பாக்கி இருக்க‌ற‌து நாங்க‌ளும், நீங்க‌ளும் ம‌ட்டும்தாங்க‌ " .

[ read more ]

ஆனாலும்

தெப்பம் விடப்படுவதில்லை தாமரை பூப்பதில்லை தளும்பும் அலைகளில்லை ஏரிக்கரை சாலை பஸ்ஸின் பிம்பம் விழுவதில்லை ஆனாலும் சுவற்றுப் பிளவில் சிரித்தாடும் ஆடும் எருக்கஞ்செடி பார்த்தபடி குளிர்ந்தே இருந்து விடுகிறது கிணற்று நீர் கிணற்றோடு

[ read more ]

இணைப்பு

குகையில் போய்முடியும்போது சேர்ந்துவிடுவோம்என்ற‌ந‌ம்பிக்கை‌யுட‌ன்ஒரே திசையை நோக்கிஇர‌ண்டுத‌ண்ட‌வாள‌ங்க‌ள்

[ read more ]

Be First to Comment

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: